சென்சாரில் ஏமாந்த ‘காஷ்மோரா’ – ரிலீஸ் தேதி மாற்றம்!

0
319

kashmoroகார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, மனீஷா யாதவ் நடிப்பில், இயக்குனர் கோகுல் இயக்கத்தில் சுமார் 60 கோடி செலவில் பிரமாண்டமாக உருவாகியுள்ள ‘காஷ்மோரா’ திரைப்படம் சமீபத்தில் சென்சார் போர்டுக்கு சென்றுள்ளது.

எப்படியாவது அனைவரும் பார்க்கக்கூடிய ‘யு’ சான்றிதழ் கிடைக்கும், அதன் மூலம் தமிழக அரசின் வரிச் சலுகை கிடைக்கும் என்று பெரிதும் எதிர்பார்த்திருந்த தயாரிப்பாளர் தரப்பிற்கு ஏமாற்றமே மிஞ்சியுள்ளது.

படத்தை பார்த்த தணிக்கை குழு படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர். இதனால் தமிழக அரசின் வரிச் சலுகையை இழந்த ஏமாற்றத்தில் இருக்கிறதாம் தயாரிப்பாளர் தரப்பு. மேலும் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் , தீபாவளிக்கு இரண்டு நாட்கள் முன்னதாக வெளியாகும் என நடிகர் கார்த்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தில் வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ள கார்த்தி, சரித்திரக் கால படம் என்பதால் டப்பிங்கிலும் வித்தியாசப்படுத்தியிருக்கிறாராம். சென்சாரில் ,யு/ஏ சான்றிதழ் பெற்றுள்ள ‘காஷ்மோரா’ தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.