நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் முறைக்கு பிசிசிஐ ஒப்புதல்

0
16

bcciஅடுத்த மாதம் நடைபெற உள்ள இந்தியா- இங்கிலாந்து இடையேயான கிரிக்கெட் போட்டியில் நடுவரின் தீர்ப்பை மறு ஆய்வு செய்யும் Decision Review System முறைக்கு பிசிசிஐ ஒப்புதல் வழங்கியுள்ளது.

பல்வேறு தரப்பில் இருந்தும் இம்முறையை நடைமுறைக்கு கொண்டு வர வலியுறுத்தியதை அடுத்து இம்முடிவை பிசிசிஐ எடுத்துள்ளது. மேலும் பந்து வீச்சின் போது பந்தின் பாதையையும், அது தாக்கும் இடங்களையும் உன்னிப்பாக காண்பதற்கு வசதியாக இம்முறை ‘Ultra edge’ வசதி கொண்ட ultramotion கேமராவை பயன்படுத்தவும் பிசிசிஐ முடிவு செய்துள்ளது.