ஏர்டெல், வோடஃபோன், ஐடியா நிறுவனங்களுக்கு ரூ.3,050 கோடி அபராதம்

0
35

traiபுதிய நிறுவனமான ரிலையன்ஸ் ஜியோவின் வாடிக்கையாளர்கள் செய்யும் அழைப்புகளுக்கு இணைப்பு வழங்க ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்போன் நிறுவனங்கள் மறுப்பது வாடிக்கையாளர் நலனுக்கு எதிரான நடவடிக்கை என ட்ராய் அமைப்பு கூறியுள்ளது.

மேலும், இது வர்த்தக போட்டிக்கு எதிரானது என்று கூறியுள்ள ட்ராய், ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்களுக்கு தலா ரூ.3,050 கோடி அபராதம் விதிக்க பரிந்துரைத்துள்ளது. ஐடியா நிறுவனத்துக்கு 950 கோடி ரூபாய் அபராதம் விதிக்கவும் ட்ராய் கூறியுள்ளது.