ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப் : பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியா!

0
90

hockeyமலேசியாவில் நடந்து வரும் ஹாக்கி சாம்பியன்ஸ் ட்ராபி கோப்பையில், இந்திய அணி பாகிஸ்தானை 3-2 கோல் கணக்கில் வீழ்த்தி இன்று அசத்தல் வெற்றி பெற்றது. 21வது நிமிடத்தில் பர்தீப் மோர் கோல் அடித்து முன்னிலை கொடுத்தார்.

ஆனால், பாகிஸ்தானின் முஹம்மது ரிஸ்வானும், முஹம்மது இர்பானும் 31வது மற்றும் 39வது நிமிடங்களில் கோல் அடித்து அவர்களுக்கு முன்னிலை கொடுத்தனர். சிறிது நேரத்திற்கு பின் ருபிந்தர் பால் சிங் மற்றும் ராமந்தீப் சிங்க் தலா ஒரு கோல் அடித்து இந்தியா வெல்ல உதவினர். இந்த வெற்றியுடன் இந்தியா புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்தது.