ரசிகர்களுக்கு கட்டளையிட்ட கமல்ஹாசன்

0
32

kamalhasanகமல்ஹாசன் பிறந்த நாளான நவம்பர் 7 ஆம் தேதியன்று கமலின் நற்பணி இயக்கத் தோழர்கள், ரத்த தான முகாம், அன்னதானம் என விமரிசையாக கொண்டாடுவார்கள். முன்கூட்டியே திட்டமிட்டு கமலின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்படும்.

இந்த வருடம் தமிழக முதல்வர் உடல் நலமின்றி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதால் பிறந்த நாள் நிகழ்ச்சிகள் அனைத்தையும் நிறுத்த சொல்லியிருக்கிறார் கமல். இது தொடர்பாக ட்விட்டரில், “தமிழக முதல்வரின் உடல்நலம் இவ்வாறிருக்க, என் பிறந்தநாள் விழாக்களைத் கண்டிப்பாய்த் தவிர்க்க வேண்டுகிறேன்” என்றிருக்கிறார் கமல்ஹாசன்.