20 வருடங்களுக்கு பின் இந்தியாவில் விளையாடும் லியாண்டர் பயஸ்

0
65

liyandar-payasடென்னிஸ் வீரர்கள் கூட்டமைப்பு நடத்தும் டென்னிஸ் போட்டியானது இந்த வருடம் இந்தியாவில் நடைபெற உள்ளது. 20 வருடங்களுக்கு பின்னர், இந்தியாவில், இப்போட்டியில் இந்திய வீரர் லியாண்டர் பயஸ்(43) விளையாட உள்ளார்.

இதற்கு முன்னர் கடந்த 1996-ம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற போட்டியில் கடைசியாக அவர் விளையாடினார். 20 ஆண்டுகளுக்கு பிறகு அவர் களம் இறங்குவதால் அவர் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இவருடன் மற்றொரு இந்திய வீரரான ராம் குமார்(21) இப்போட்டியில் ஜோடி சேருகிறார். ராம் குமார், பயஸுக்கு ஆண்களுக்கான இரட்டையர் போட்டியில் 110-வது ஜோடி என்பது குறிப்பிடத்தக்கது.