மெட்ரோ ரயில் நிலையத்தில் இளம் பெண் குத்திக் கொலை

0
57

murderகுர்கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இன்று காலை 9.30 மணியளவில் 22 வயது இளம்பெண் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். ரயில் நிலையத்தில் நின்றுகொண்டிருந்த அந்தப்பெண்ணை 25 வயது வாலிபர் ஒருவர் திடீரென கத்தியால் சரமாரியாக தாக்கத் தொடங்கினார்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பாதுகாப்பு படையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை அருகில் இருந்த மருத்துவமனையில் சேர்த்தனர். இருந்தும் காலை 11.30 மணியளவில் சிகிச்சை பலனின்றி இறந்தார். சம்பவம் குறித்து கைது செய்யப்பட்ட கொலையாளியிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.