கிரிக்கெட் ஜாம்பவான் சச்சினின் சாதனையை முறியடித்த தோனி

0
170

dhoniநியூஸிலாந்துடனான 2-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் தோனி 4-வது வீரராக களமிறங்கி 91 பந்துகளில் 80 ரன்கள் விளாசினார். இதில் 3 சிக்ஸர்களும் அடங்கும். இதன் 3வது ஷாட்டை எடுக்கும் போது தோனி கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்தார்.

தோனி 244 இன்னிங்சில் 196 சிக்ஸர்கள் அடித்து, ஒருநாள் போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார். மேலும், அதிக சிக்ஸர்கள் அடித்த சர்வதேச வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில இருக்கிறார். டெண்டுல்கர் 195 சிக்ஸர்கள், கங்குலி 190 சிக்ஸர்கள் அடித்துள்ளனர்.