தல படம் இல்லாததால் துக்க தீபாவளியாம்!!

0
71

ajithதல அஜித் நடித்த ‘வேதாளம்’ படம் கடந்த வருடம் வெளியாகி ரசிகர்களுக்கு ‘தல’ தீபாவளியாக அமைந்தது. தற்போது சிறுத்தை சிவாவின் இயக்கத்தில் பெயரிடப்படாத படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் தல. படத்தின் டைட்டில் அல்லது டீசர் என ஏதாவது ஒன்று தீபாவளிக்கு வெளியாகும் என்று தல ரசிகர்கள் எதிர்ப்பார்த்திருந்தனர்.

எந்த தகவலும் கிடைக்காத நிலையில் மனம் நொந்து போன மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள், ஒரு போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். அதில், “அஜித் படம் வராத திரையரங்கு எங்களுக்கு சிறையரங்கு. தல படம் வரும் நாளே எங்களுக்கு விடுதலை தீபாவளி” என்று அச்சிட்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.