ஹீரோவுக்கு ஹார்ட் ஸ்மைலிகளை அள்ளி வீசிய த்ரிஷா

0
118

trishaநடிகை த்ரிஷாவின் படத்தைப் பற்றி வந்த செய்திகளை விட, உடன் நடிக்கும் நடிகர்களுடன் வந்த கிசுகிசுக்கள் தான் அதிகம். அனைத்து முன்னணி ஹீரோக்களுடனும் நடித்து விட்ட த்ரிஷா சமூக வலைத்தளமான ட்விட்டரில் தனது ரசிகர்களுடன் அதிகம் டச்சில் இருப்பவர்.

சமீபத்தில் ட்விட்டரில் த்ரிஷாவிடம் உங்களுக்கு பிடித்த நடிகர் யார் என்று கேட்கப்பட்டது. அதற்கு த்ரிஷா டைட்டானிக் படம் மூலம் இளம் பெண்களின் மனதை கவர்ந்த ஹாலிவுட் நடிகர் லியனார்டோ டிகேப்ரியோ பெயரை குறிப்பிட்டிருந்தார். மேலும் அவரை மிகவும் பிடிக்கும் என்று பல ஹார்ட் ஸ்மைலிகளை அள்ளி வீசியுள்ளார்.