டெல்லி பஜாரில் வெடி விபத்து; ஒருவர் பலி

0
31

delhi-fireபுதுடெல்லியின் சாந்தினி சவுக் பகுதியில் பயங்கர சத்தத்துடன் இன்று காலை நடந்த வெடி விபத்தில் ஒருவர் பலியானார்; 5 பேர் காயமடைந்தனர். நாயா பஜார் என்ற இடத்தில் பட்டாசு பொருட்கள் அதிகமாக இருந்த ஒரு கட்டிடம் காலை 10.40 மணியளவில் வெடித்தது.

இதில் அருகே உள்ள வீடுகளின் கண்ணாடிகள் சிதறின. போலீஸ், தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.