தலைவருக்கு உடல் நலமில்லை: திமுக தலைமை

0
42

karunanidhiஉடல் நிலை சரி இல்லாததால் ஓய்வு எடுத்து வரும் திமுக தலைவர் கருணாநிதியை சந்திக்க பார்வையாளர்கள் வருவதை தவிர்க்குமாறு திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது குறித்த அவர்கள் வெளியிட்ட செய்திக் குறிப்பில்: “தலைவர் கலைஞர் வழக்கமாக அவர் உட்கொண்டு வரும் மருந்துகளில் ஒன்று ஒத்துக் கொள்ளாத நிலையில், ஒவ்வாமை (அலர்ஜி) ஏற்பட்டு, அதனால் உடல் நலம் பாதிக்கப்பட்டு ஓய்வெடுத்து வருகிறார். மருத்துவர்கள் மேலும் சில நாட்கள் தலைவர் கலைஞர் அவர்களை ஓய்வெடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார்கள்,” எனக் கூறப்பட்டுள்ளது.