முழு சொத்துவிவரம் வேண்டும் – மல்லையாவுக்கு கோர்ட் உத்தரவு

0
23

vijay-mallyaபல்வேறு வங்கிகளில் ரூ.9000 கோடி மோசடி செய்த வழக்கில் சிக்கியுள்ள விஜய்மல்லையா, லண்டனில் தலைமறைவாக உள்ளார். அவரது பாஸ்போர்ட்டை மத்திய அரசு முடக்கிதால், அதனை திரும்ப தர வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் அவர் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் விசாரணைக்கு வந்த வழக்கில், வெளிநாட்டில் உள்ள சொத்துவிவரம் குறித்த முழு தகவல்களை 4 வாரத்தில் தெரிவிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மேலும் டியாஜியோ நிறுவனத்திடம் இருந்து பெற்ற ரூ.267 கோடி விவரங்களை வெளியிட வேண்டும் என்றும் கோர்ட் கூறியுள்ளது.