ஜியோவின் 4G ஆஃபர் மார்ச் 2017 வரை வழங்க ரிலையன்ஸ் திட்டம்

0
45

reliance-jioரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ சிம்மின் 4G அறிமுகச் சலுகை ஆஃபரை டிசம்பர் மூன்றாம் தேதி வரை மட்டுமே பெற முடியும் என டிராய் அமைப்பு அறிவித்திருந்தது. இந்நிலையில் இந்த சலுகையினை மார்ச் 2017 வரை நீட்டிக்க ரிலையன்ஸ் ஜியோ திட்ட மிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால் ட்ராயின் விதிகளின் படி, ஜியோ உள்பட எந்த தொலை தொடர்பு நிறுவனமும் தாங்கள் வழங்கும் சலுகையை 90 நாட்களுக்கு மேல் நீட்டிக்கக் கூடாது என்று கூறியுள்ளது. அதனால் ‘வெல்கம் ஆஃபர்’ என்னும் பெயரை மாற்றி இந்த சலுகைகளை மீண்டும் வேறு ஒரு பெயரில் வழங்க ஜியோ திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.