இன்று ‘நவீன ஓவியங்களின் பிரம்மா’ பிறந்த தினம்!!

0
22

bramma‘நவீன ஓவியங்களின் பிரம்மா’ என்றழைக்கப்படும் ஓவியக் கலைஞர் பாப்லோ பிக்காஸோ 1881ம் ஆண்டு அக்டோபர் 25 ஆம் தேதி ஸ்பெயின் நாட்டிலுள்ள மலகா என்ற இடத்தில், ஜோச் ரூயிசு பால்சுகா- மரியா பிக்காஸோ தம்பதியருக்கு பிறந்த முதல் மகன். இந்நாட்டின் மிகப் பெரிய ஓவியரும், சிற்பியுமான பிக்காஸோ, ஓவியம், சிற்பம், அச்செடுத்தல் மற்றும் செராமிக் ஓவியங்களில் குறிப்பிடத்தக்க வளர்ச்சிக்கு வித்திட்டவர்.

ஓவியத்தை தத்ரூப காட்சியில் வருணிப்பதில் வல்லவராக திகழ்ந்த பிக்காஸோ, 20ம் நூற்றாண்டின் ஓவியத் துறை தொடர்பில் மிகப் பரவலாக அறியப்பட்டவர்களுள் ஒருவர் ஆவார்.

இவரது தந்தை ஓவியராகவும் உள்ளூர் அரும்பொருளகத்தின் ஓவியங்களுக்கு பொறுப்பாளராகவும் இருந்ததால் தனது மகனின் ஓவிய ஆர்வத்தை ஊக்கப்படுத்தி பயிற்சியளித்தார். 14 வயது நிறைவதற்கு முன்பே பாரம்பரிய ஓவியக் கலையையும், பிளாஸ்டர் மண்ணில் தத்ரூபமான சிற்பங்கள் செய்யவும் பிக்காஸோ நன்கு கற்றுக்கொண்டார்.

1904 ஆம் ஆண்டு தனது 23 வயதில் பாரிஸுக்கு இடம்பெயர்ந்த பிக்காஸோ, அங்கு குடியேறிய 3 ஆண்டுகளில் அவர் வரைந்த ‘Les Demoiselles d’Avignon’ என்ற ஓவியம் உலகையே வியப்பில் ஆழ்த்தியது. இந்த ஓவியம் தான் ‘கியூபிசம்’ என்ற ஓவிய பாணியை தொடங்கி வைக்க காரணமாக இருந்தது.

பிக்காஸோ 78 ஆண்டுகளில் சுமார் 13500 ஓவியங்கள், சுமார் 34000 விளக்கப்படங்கள் (illustration), சுமார் 400 சிற்பங்கள் உள்ளிட்ட படைப்புகளை உலகிற்கு வழங்கியுள்ளார். 5 நூற்றாண்டுகளுக்கு பிறகும் தனது ஓவியங்கள் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கும் பிக்காஸோ 1973, ஏப்ரல் 8ம் தேதி தமது 92 வயதில் பிரான்ஸில் காலமானார்.