நியூஸிலாந்து தொடரை வெல்லுமா இந்தியா?

0
24

viratஇந்தியா- நியூஸிலாந்து இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்கிறது. இதனை தொடர்ந்து இரு அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி நாளை ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில் பகல்- இரவாக நடைபெற இருக்கிறது.

நாளைய ஆட்டத்திலும் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. மேலும், நியூஸிலாந்து அணி இந்த போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவுக்கு பதிலடி கொடுக்கும் ஆர்வத்துடன் களம் இறங்க உள்ளது.