கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி நடிகை ரம்பா மனு!!

0
51

rambaதமிழ் திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வந்த நடிகை ரம்பா, 2010 ஆம் ஆண்டு கனடாவை சேர்ந்த இந்திரன் பத்மநாதன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு லாவண்யா, சம்பா என்ற இரு பெண் குழந்தைகள் உண்டு.

இந்நிலையில், ரம்பாவுக்கும் இந்திரனுக்கும் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இந்திரன் ரம்பாவிடம் இருந்து விவாகரத்து வழங்க கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். இதனை எதிர்த்து ரம்பா குடும்பநல நீதிமன்றத்தில், தன் கணவருடன் சேர்த்து வைக்கக்கோரி உள்ளாராம். வருகிற டிசம்பர் 3 ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வர உள்ளது.