தீபாவளிக்கு ‘கொடி’ பறப்பதில் சிக்கலா?

0
31

kodiஅரசியலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ‘கொடி’ படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ‘கொடி’ படத்தின் தயாரிப்பாளரான மதன், இதற்கு முன் அவர் வெளியிட்ட படங்களுக்கான தொகையை இன்னும் விநியோகஸ்தர்களுக்கு முழுவதுமாக கொடுக்கவில்லையாம்.

மொத்த பணத்தையும் கொடுத்தால் தான் ‘கொடி’ படத்தை திரையிடுவோம் என்று விநிநோகஸ்தர்கள் கூறி வருவதால், இப்படம் தீபாவளிக்கு வெளிவருவது சந்தேகம் என்கிறார்கள். தீபாவளிக்கு வெளிவர தவறினால், அடுத்த ஆண்டு மே மாதம் தான் கொடி திரைக்கு வரும் என்பதால் தனுஷ் தலையிட்டு தீர்த்து வைக்க அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்களாம்.