‘கட்டமராய்டு’ படத்தில் ஸ்ருதி ஹாசன்!

0
46

srutihasanதல அஜித்தின் நடிப்பில் சூப்பர் ஹிட்டான ‘வீரம்’ படத்தின் தெலுங்கு ரீமேக் தான் ‘கட்டமராய்டு’ திரைப்படம். இயக்குனர் டாலி இயக்கத்தில் டோலிவுட் பவர்ஸ்டார் பவன் கல்யாணுடன் ஜோடியாக நடிக்கிறார் ஸ்ருதிஹாசன்.

வரும் 2017 மார்ச் மாதம் தெலுங்கு வருடப் பிறப்பான யுகாதி அன்று படம் ரீலீஸாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘ஜல்சா’, ‘சர்தார்’ ஆகிய பவன் கல்யாண் நடித்த படங்கள் யுகாதியில் ரிலீசானது. அந்த நாளில் வெளிவந்ததால் பெரும் வெற்றி பெற்றது. அதனால் தான் ‘கட்டமராய்டு’ திரைப்படமும் யுகாதி ரிலீஸ் என்கிறார்கள்.