மலேசிய மருத்துவமனையில் தீ விபத்து – 6 பேர் பலி

0
29

fireமலேசியாவின் ஜோஹோர் பஹ்ரு நகரிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாயினர். மளமளவன பரவிய தீ இரண்டாவது மாடியில் தீவிர சிகிச்சை பிரிவு அறையை சூழ்ந்துகொண்டது.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் பல மணி நேரம் போராடி தீயை அணைத்ததோடு 6 உடல்களை மீட்டனர். இதனை தொடர்ந்து அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் உடனடியாக வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்திற்காக காரணம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்,