வெ.இ.-க்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

0
25

pakistan-crikபாகிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய 2-வது டெஸ்ட் போட்டி அபுதாபியில் நடந்தது. இதில் டாஸ் வென்று தனது முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 452 ரன்கள் குவித்தது.

வெ.இ. 224 ரன்களில் சுருண்டது. தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை தொடங்கிய பாகிஸ்தான் 227 ரன்கள் எடுத்திருக்கும் போது டிக்ளேர் செய்தது. இரண்டு இன்னிங்ஸையும் சேர்த்து பாகிஸ்தான் 455 ரன்கள் முன்னிலை பெற்றதால், வெ.இ.-க்கு 456 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனை அடுத்து களமிறங்கிய வெ.இ. 322 ரன்கள் எடுக்க, பாகிஸ்தான் அணி 133 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, 2-0 என தொடரையும் கைப்பற்றியது.