திருவண்ணமலையில் மர்ம நோய் தாக்கத்தால் 7 பேர் பலி

0
21

hospitalதிருவண்ணாமலை தண்டரை கிராமத்தில் ஜோசப் என்பவர் இன்று காலை உயிரிழந்ததை அடுத்து, சுகாதாரத் துறை சார்பில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.

உடல் நலக்குறைவு ஏற்படுவதும் அதன்பின்னர் ஓரிரு நாட்களில் உயிரிழப்பதும் நிகழ்வதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். இந்நிலையில், தண்டரை கிராமத்தில் இதுவரை 7 பேர் உயிரிழந்தது தொடர்பாகத் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்டவர்களின் ரத்தமாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.