தீபாவளியன்று 6am – 10pm வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்

0
53

crackersஒலி, மாசு, புகையில்லா தீபாவளி கொண்டாடுவது குறித்து வேலூர் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அசோகன் வெளியிட்ட செய்திக் குறிப்பில், “தீபாவளியன்று காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்.

விற்பனை செய்யப்படும் பட்டாசுகள், அவற்றில் அடங்கியுள்ள வேதிப்பொருள், அவை வெடிக்கும் போது ஏற்படும் ஒலி, மாசு அளவுகள் குறித்த தகவல் அறிவிப்பு பலகையில் குறிப்பிட வேண்டும். அதிகபட்ச ஒலி அளவான 125 டெசிபலுக்கு மேல் ஒலி ஏற்படுத்தும் பட்டாசுகளை விற்பனை செய்யக் கூடாது ” என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.