‘எஸ் 3’ : தீபாவளிக்கு வரும் டீசர்!?

0
41

suryaஹரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சிங்கம்’ படத்தின் மூன்றாவது பாகத்திற்கு ‘சிங்கம் 3’ எனப் பெயர் வைக்காமல் ‘எஸ் 3’ எனப் பெயர் வைத்துள்ளனர். இப்படத்தைத் தமிழிலும், தெலுங்கிலும் ஒரே சமயத்தில் வெளியிட உள்ளார்கள்.

முதல் இரண்டு பாகங்களிலும் நடித்த அனுஷ்கா, மூன்றாவது பாகத்திலும் இருக்கிறார். கூடவே மற்றொரு நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இப்படத்தின் ‘டீசர்’ தீபாவளி அன்று வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் 16ம் தேதி படத்தை வெளியிடுவதாகத் தேதி குறித்துள்ளனர்.