ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக வடிவேலு

0
60

vadivelu-gv-prakash‘ப்ரூஸ்லீ’ மற்றும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் ஜி.வி.பிரகாஷ். டிசம்பரில் படப்பிடிப்புத் துவங்கவுள்ள இப்படத்தில், வடிவேலும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இது குறித்துப் படக்குழுவினர் கூறுகையில், “ஜி.வி.பிரகாஷுக்கு வில்லனாக நடிக்கவிருக்கிறார் வடிவேலு. காமெடி கலந்த வில்லன் வேடம் என புதுமையாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர். இக்கதையைக் கேட்டவுடனே ‘நான் நடிக்கிறேன்’ என்று ஒப்பந்தமாகி விட்டார் வடிவேலு” என்று தெரிவித்தனர்.