திருமலை : லட்டு தயாரிக்குமிடத்தில் தடுக்கப்பட்ட தீ விபத்து

0
23

thirumalaiதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. அதற்காகத் திருமலையில் உள்ள லட்டு தயாரிக்கும் கூடத்தில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்தநிலையில், நேற்று மாலை 4.30 மணியளவில் லட்டு தயாரிக்கும் கூடத்தில் 20–ம் நம்பர் கியாஸ் அடுப்பில் திடீரெனத் தீ விபத்து ஏற்பட்டது. அதிர்ச்சி அடைந்த ஊழியர்கள் ஒட்டு மொத்த கியாஸ் இணைப்பையும் துண்டித்துத் தீயை அணைத்தனர். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. பின்னர் 6 மணியளவில் வழக்கம்போல் பணிகள் தொடர்ந்தன.