ஆசியன் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி : சீனாவை துவம்சம் செய்த இந்தியா

0
37

indian-hockeyகுவான்டனில் நடைபெற்று வரும் ஆசியன் சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் நேற்றைய நாள் ஆட்டத்தில் இந்தியா – சீனா அணிகள் மோதிக் கொண்டன. ஆகாஷ்தீப் சிங் தலைமையில் களம் இறங்கிய இந்திய வீரர்கள் யூசுப் மற்றும் ஜஸ்ஜித் முறையே இரண்டு கோல்கள் போட்டு அணியின் வெற்றிக்கு வழிவகை செய்தனர்.

அபாரமாக விளையாடிய இந்திய அணி 9 கோல்கள் போட்டது. இறுதியில் சீனா கோல் ஏதும் எடுக்காத நிலையில் 0-9 என்ற கணக்கில் இந்தியாவிடம் தோல்வியை தழுவியது. 4 ஆட்டங்களில் விளையாடி உள்ள இந்தியா 10 புள்ளிகள் பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. அடுத்தப் போட்டியில் மலேசியாவை இந்தியா எதிர்கொள்ள உள்ளது.