ஜல்லிக்கட்டு: பீட்டா அமைப்பினர் இன்று டெல்லியில் போராட்டம்

0
21

jallikattuதமிழகத்தில் நடைபெற்று வந்த பாரம்பரிய வீர விளையாட்டுகளில் ஒன்றான ஜல்லிக்கட்டில் காளைகள் துன்புறுத்தப்படுவதாக கூறி பீட்டா அமைப்பினர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர, அதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது.

இதனிடையே, தமிழகத்தை சேர்ந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் மற்றும் மத்திய மந்திரி ஆகியோர் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நிச்சயம் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் என கூறி வரும் நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை மத்திய அரசு விலக்கக்கூடாது என்று கூறி பீட்டா அமைப்பினர் டெல்லியில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.