டென்னிஸ் தரவரிசை பட்டியலில் இருந்து மரியா ஷெரபோவா நீக்கம்

0
32

mariaரஷ்ய டென்னிஸ் வீராங்கனையான மரியா ஷெரபோவாவை பெண்களுக்கான டென்னிஸ் கூட்டமைப்பின் ஒற்றையர் தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கப் பட்டுள்ளார். முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான ஷரபோவா ஊக்க மருந்து பயன்படுத்திய குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் போட்டிகளில் பங்கேற்க தடை விதிக்கப் பட்டது.

பின்னர் இதனை 24 மாதங்களில் இருந்து 15 மாதமாக குறைத்து விளையாட்டிற்கான சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அவரை தரவரிசை பட்டியலில் இருந்து நீக்கி விட்டதாக பெண்களுக்கான டென்னிஸ் கூட்டமைப்பு அதன் இணையதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.