ஆபாச இணையதளங்களுக்குத் தடை : பாட்னா ரெயில்வே

0
27

phoneஇந்தியா முழுவதும் 23 ரெயில் நிலையங்களில், பயணிகளுக்காக இலவச வைபை இன்டர்நெட் வசதி ரெயில்டெல் நிறுவனம் மூலம் தொடங்கப்பட்டுள்ளது. நாட்டில் அதிகம் வை-பை இன்டர்நெட் சேவையை பயன்படுத்தும் ரெயில் நிலையமாக பாட்னா ரெயில் நிலையம் உள்ளது.

இந்நிலையில், இங்கு பெரும்பாலோனோர் ஆபாச தளங்களைப் பார்வையிடவே இணைய வசதியைப் பயன்படுத்துகின்றனர் என்றும், யூ-டியூப், விக்கிபீடியா இரண்டையும் அதிகமான பேர் பார்வையிடுவதாகவும் தெரியவந்துள்ளது. அதனைத்தொடர்ந்து, அங்கு வைபையில் ஆபாச வெப்சைட்கள் தடை செய்யப்பட்டுள்ளன.