குடி போதையில் விபத்து: விகாஸ் ஆனந்துக்கு 27 லட்சம் அபராதம்

0
36

vikasகார் ரேஸ் வீரரான விகாஸ், சென்னை கத்தீட்ரல் சாலையில் கடந்த மாதம் 19 ஆம் தேதி குடிபோதையில் அதிவேகமாகக் காரை ஓட்டி ஏற்படுத்திய விபத்தில், 12 ஆட்டோக்கள் சேதமடைந்தன, ஆட்டோ டிரைவர் ஒருவர் பலியானார். மேலும் 11பேர் படுகாயம் அடைந்தனர்.

இந்நிலையில், அவரது ஜாமின் வழக்கை நேற்று விசாரித்த உயர்நீதிமன்றம், விகாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி, “உயிரிழந்தவர் குடும்பத்திற்கும், காயமடைந்தவர்களுக்கும் இழப்பீடு தொகையாக 27.5 லட்சம் ரூபாயைச் செலுத்த வேண்டும். சேதமடைந்த ஆட்டோக்களுக்கு தலா ஒரு லட்சம் இழப்பீட்டுத் தொகையை நவ.11 ஆம் தேதிக்குள் செலுத்தவேண்டும்” எனத் தீர்ப்பளித்தது.