கார்பன்-டை-ஆக்சைடில் இருந்து எரிபொருள் தயாரிப்பு !

0
30

carbonஅமெரிக்காவின் Oak Ridge National Laboratory-யைச் சேர்ந்த விஞ்ஞானிகள், சுற்றுச்சூழலுக்குக் கேடு விளைவிக்கும் கார்பன்-டை-ஆக்சைடை எத்தனால் என்னும் புதுப்பிக்கப்படத்தக்க (renewable energy) எரிசக்தியாக மாற்றும் முறையைக் கண்டுபிடித்துள்ளனர்.

இது, எல்லா எரிபொருள் தயாரிக்கும் வழிகளையும் புரட்டிப் போடும் நிகழ்வாகும். நேனோ தொழில்நுட்பத்துடன் மின்சாரத்தைப் பயன்படுத்தி, காப்பர் மற்றும் கார்பன் மீது வேறு ஒரு ஆய்வை மேற்கொள்கையில் இந்த எரிபொருள் தயாரிக்கும் முறை எதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.