28,29,30 தேதிகளில் பட்டாபிராம் – அரக்கோணம் மார்க்க ரயில் சேவையில் மாற்றம்

0
37

indian-trainபட்டாபிராம் – அரக்கோணம் இருப்புப்பாதை வழித்தடத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை(28) மற்றும் 29,30 ஆகிய மூன்று நாட்களுக்கு ரயில் சேவையில் மாற்றம் செய்துள்ளதாக தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தென்னக ரயில்வே வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நாளை வெள்ளிக்கிழமை ரயில் எண் 11027 சிஎஸ்டி மும்பை – சென்ட்ரல் மெயில், ரயில் எண் 22650 ஈரோடு – சென்ட்ரல் ஏற்காடு விரைவு ரயில், ரயில் எண் 22652 பழனி – சென்ட்ரல் விரைவு ரயில், ரயில் எண் 12658 கேஎஸ்ஆர் பெங்களூரு – சென்ட்ரல் மெயில், ரயில் எண் 12672 மேட்டுப்பாளையம் – சென்ட்ரல் நீலகிரி விரைவு ரயில் ஆகிய ரயில்களை 10 நிமிடம் தாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தை வந்தடையும் என தெரிவிக்கப் பட்டுள்ளது.

இதேபோல், ரயில் எண் 43202: திருவள்ளூர் – மூர்மார்க்கெட் மின்சார ரயில் இரண்டும் 10 நிமிடம் தாமதமாக சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும். மேலும் விபரங்களுக்கு இணைந்திருங்கள்.