இத்தாலியில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கம்

0
27

italy-earthஇத்தாலி நாட்டில் நேற்று இரவு இரட்டை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இத்தாலியின் மார்சே பகுதியில் உள்ள Castelsantangelo sul Nera எனும் பகுதியில் 10 கிமீ ஆழத்தில் உருவான ஏற்பட்ட இரட்டை நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.4 மற்றும் 6.0-வாக பதிவானது.

Castelsantangelo பகுதியில் அமைந்துள்ள பழங்கால தேவாலயங்கள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. மின்சாரம் தடைபட்டுள்ளதால் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி உள்ளனர். இந்த பயங்கர இரட்டை நிலநடுக்கத்தில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை.