சிரியாவில் பள்ளி மீது தாக்குதல்: 22 குழந்தைகள் பலி

0
31

sriyaசிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் இட்லிப் மாகாணத்தில், சிரியப் படைகளுடன் ரஷ்யப் படைகள் சேர்ந்து நேற்று நடத்திய வான் வழித் தாக்குதலில் 22 குழந்தைகள் மற்றும் 6 பள்ளி ஆசிரியர்கள் பலியாகியுள்ளனர்.

இதை வன்மையாக கண்டித்துள்ள ஐ.நா மனித உரிமைகள் ஆணையம், இது ஒரு போர்க்குற்றம் என்றும், மிகக் கொடூரமான செயல்பாடு என்றும் குற்றம் சாட்டியுள்ளது. சிரியாவில் கடந்த மார்ச் 2011ஆம் ஆண்டு முதல், 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.