சுற்றுலா விசாவில் மலேசிய சென்ற இந்தியத் தமிழர்கள் கைது

0
21

malaysiaமலேசியாவில் பூச்சோங் என்ற இடத்தில் சோதனை நடத்திய குடிவரவு அதிகாரிகள், விசா காலம் முடிந்த பின்னரும் அங்கு தங்கியிருந்த 29 தமிழகத் தமிழகர்களை கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்த அதிகாரிகள், திடீரென இந்த சோதனை நடத்தப்பட்டதாகவும், அப்போது, உரிய ஆவணங்கள் இல்லாமல் பல இந்திய தமிழர்கள் தங்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகவும், அதில் சில பேர் சுற்றுலா விசாவில் வந்து, அப்படியே இங்கே தங்கி விட்டதாகவும் தெரிவித்தனர், இது தொடர்பாக கைது செய்யப்பட்டவர்களிடம் மலேசிய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.