மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு

0
15

modi-2தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்குக் கூடுதலாக, 2% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்றும், ஜூலை 1ம் தேதியை முன்தேதியாக வைத்து, இது அமலுக்கு வருகிறது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி உயர்வை 3 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும் என மத்திய அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது.