ரஷ்ய வீரரின் வெள்ளிப் பதக்கம் யோகேஷ்வருக்கு இல்லை

0
26

yogeshwarar2012 ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக்கில் இந்திய மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் வெண்கல பதக்கம் வென்றிருந்தார். இதே ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றிருந்த ரஷ்யாவை சேர்ந்த பெசிக் குடுகோவிடம் இருந்து முன்பு எடுக்கப்பட்ட மாதிரிகள் மீண்டும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, அவர் ஊக்கமருந்து பயன்படுத்தியது தெரியவந்தது.

இதனை அடுத்து அவரிடம் இருந்து வெள்ளிப் பதக்கம் தத்துக்கு வந்து சேரும் என்ற தகவல் வெளியாகின. இந்நிலையில், 2013ல் கார் விபத்தில் மரணம் அடைந்து விட்ட பெசிக் குடுகோவ் மீதான ஊக்கமருந்து விசாரணையை கைவிட சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி முடிவு செய்துள்ளது.