ஓலா மூலம் இனி BMW கால் டாக்சி!

0
28

olaBMW ஆடம்பரக் காரை கால் டாக்சியாக பயன்படுத்தும் புதிய திட்டத்தை ஓலா நிறுவனம் தன் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப் படுத்தியுள்ளது. BMW காருக்கு குறைந்தபட்ச கட்டணமாக 250 ரூபாயும், அதன் பிறகு ஒவ்வொரு கிமீ.க்கும் 20 ரூபாயிலிருந்து 22 ரூபாய் வரை கட்டணமாக செலுத்த வேண்டும்.

கிமீ கணக்கின்றி மணிக் கணக்கிலும் BMW காரை டாக்சியாக பயன்படுத்த முடியும். இப்புதிய திட்டம் முதற்கட்டமாக டெல்லி, பெங்களூர் மற்றும் மும்பை நகரங்களில் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. ஏற்கனவே பிரீமியர் வகையில் பென்ஸ், ஃபோர்சுனர் கார்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.