“நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவோம்” ஸ்டாலின் எச்சரிக்கை

0
29

stalinசட்டமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எதிர்கட்சித்தலைவர் மு.க.ஸ்டாலின் , “ஆண்டு தோறும் அமைக்கப்பட வேண்டிய சட்டமன்றத்தின் 12 குழுக்களை இதுவரை சபாநாயகர் அமைக்கவில்லை.

இது பற்றி கடிதம் எழுதியும் நடவடிக்கை இல்லை. குழுக்கள் அமைக்காவிட்டால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய நிலை ஏற்படலாம் என்பதை எச்சரிக்கையாக குறிப்பிட விரும்புகிறேன்,” என்றார்.

மேலும், “கடந்த வாரம் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான நகலை அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திடம் அளிக்க வந்தோம் அவர் வராததால் அவர் அலுவலகத்தில் கொடுத்துள்ளோம்,” என்றார்.