தாம்பரம்: 3 வது ரயில் முனையம் டிசம்பர் முதல் செயல்படும்

0
39

trainசென்னைக்கு வட மாநிலங்களில் இருந்து வந்து செல்லும் ரயில்களின் வசதிக்காக சென்ட்ரலில் ஒரு முனையமும், தமிழக பகுதிகளுக்கு அதிக அளவில் இயக்கப்படும் ரயில்களுக்காக எழும்பூரில் ஒரு முனையமும் தற்போது செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கூடுதல் நெரிசலை சமாளிக்கவும் ரயில்கள் இயக்குவதற்கு வசதியாக தென் மாவட்டங்களுக்கு மூன்றாவது ரயில் முனையத்தை, தாம்பரத்தில் அமைக்கும் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் மூன்றாவது ரயில் நிலையம் டிசம்பர் மாதம் முதல் செயல்பட தொடங்கும் என்று தென்னக ரயில்வே பொது மேலாளர் வசிஷ்ட ஜோரி தெரிவித்துள்ளார்.