அம்மாவுக்காக பூஜை செய்து தேனீக்களிடம் கொட்டு வாங்கிய எம்.எல்.ஏ!

0
152

amma-beeஆம்பூர் அருகே உள்ள வடசேரியில் அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணி, முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் பெறுவதற்காக பூஜை ஒன்றை நடத்தினார். இதில் ஏராளமான அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

பூஜையின்போது கிளம்பிய புகை அருகே உள்ள மரத்தில் இருந்த தேன் கூட்டை கலைத்துள்ளது. ஆயிரக்கணக்கில் தேனீக்கள் பறந்து வந்து பூஜையில் ஈடுபட்ட இருந்த அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் மற்றும் தொண்டர்களை விரட்டி விரட்டி கொட்டியது. தேனீக்களின் கொட்டு தாங்காமல் அதிமுக எம்.எல்.ஏ. பாலசுப்பிரமணியம் மற்றும் தொண்டர்கள் அடித்து பிடித்து தப்பியோடினர். இதில் 10 அதிமுக தொண்டர்களுக்கு காயம் ஏற்பட்டது.

தேனீ கொட்டியதில் காயமடைந்த அனைவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.