ஸ்டாலினுடன் நாராயணசாமி சந்திப்பு

0
27

stalinதமிழக எதிர்கட்சித்தலைவரும், திமுக பொருளாளருமான ஸ்டாலினை, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்தித்து பேசியுள்ளார்.

இந்த சந்திப்பு தொடர்பாக எந்த தகவலும் வெளிவராத நிலையில், புதுச்சேரி நெல்லித்தோப்பு தொகுதியில் நடைபெறவுள்ள இடைத்தேர்தலில் நாராயணசாமியை எதிர்த்து போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஓம்சக்திசேகரை பாஜக ஆதரிக்கவுள்ளதாக வந்த செய்தியை அடுத்து ஸ்டாலினை, நாராயணசாமி சந்தித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.