பயணிகள் முன்னிலையில் எரித்துக் கொல்லப்பட்ட இந்திய டிரைவர்

0
52

murderஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் இந்திய பஸ் டிரைவர் ஒருவர் பயணிகள் முன்னிலையில் நேற்று உயிரோடு எரித்து கொல்லப்பட்டுள்ளார். பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் மன்மீத் அலிஷர் என்ற மன்மீத் சர்மா, நேற்று காலை 9 மணி அளவில் பிரிஸ்பேனின் பியோடெசர் பகுதியில் இருந்து 6 பயணிகளுடன் மூர்வேல் பகுதிக்கு சென்றுள்ளார்.

அப்போது பஸ்ஸில் இருந்த 48 வயது மதிக்கத்தக்க பயணி ஒருவர், தீப்பிடித்து எரியக்கூடிய ஒரு ரசாயனப் பொருளை மன்மீத் உடலில் ஊற்றியுள்ளார். அந்த இடத்திலேயே மன்மீத் தீப்பற்றி எரிந்து உயிரிழந்தார். இதையடுத்து கைது செய்யப்பட்ட பயணியிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.