இந்திய அமெரிக்கர்கள் ஹிலாரிக்கு 66 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளனர்

0
47

hillaryஅமெரிக்க அதிபர் தேர்தலில் முன்னணியில் இருக்கும் ஹிலாரி கிளின்டனுக்கு மற்றும் அவரது ஜனநாயக கட்சியின் தேர்தல் பிரச்சாரத்துக்கு ஆதரவாக அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் கிட்டத்தட்ட 10 மில்லியன் டாலர்கள் (66 கோடி ரூபாய்) வரை வழங்கியுள்ளனர்.

பல்வேறு தொழிலதிபர்கள், மற்றும் முக்கிய புள்ளிகள் தங்களுக்கு தெரிந்தவர்கள் மூலம் லட்ச கணக்கில் ஹிலாரியின் பிரச்சாரத்திற்காக சேகரித்துள்ளனர். இதில் பிராங்க் இஸ்லாம் மற்றும் ஷெபாலி ராஜ்தான் டுகால் என்ற இருவர் மட்டுமே தலா ஒரு மில்லியன் டாலர்கள் வரை சேர்க்க உதவியுள்ளனர். மேலும் ஹில்ப்ளேசர்ஸ் என்ற பெயரில் பலர் ஹிலாரிக்காக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.