கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கண்காணிப்பு கேமராக்கள்

0
43

busநாளை தீபாவளி பண்டிகை என்பதால் இன்று காலையில் இருந்தே சிறப்பு பஸ்களில் சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள் சாரை சாரையாக படையெடுத்துள்ளனர். கோயம்பேடு பஸ் நிலையத்தில் 80 கண்காணிப்பு கேமராக்கள் மூலம் 24 மணி நேரமும் போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.

சட்ட ஒழுங்கு போலீசாருடன் இணைந்து போக்குவரத்து போலீசாரும் பணியாற்றி வருகிறார்கள். பஸ் நிலையத்தை சுற்றி உள்ள பகுதிகளில் சாலையோரமாக நிறுத்தப்படும் வாகனங்கள் உடனுக்குடன் அப்புறப்படுத்துவதால் நெரிசல் குறைந்து போக்குவரத்து சீராக நடைபெற்று வருகிறது.