பட்டப்பகலில் துணிகரம் : அலாரத்தால் தப்பியது நகை , பணம்

0
54

gun-manசென்னை பெசன்ட் நகரில் அமைந்துள்ள “முத்தூட் பைனான்ஸ்” நிதி நிறுவனத்தில் பட்டப்பகலில், அதுவும் மக்கள் அதிகம் கூடும் நேரத்தில் நுழைந்த முகமூடி அணிந்த 6 பேர் அங்கிருந்த நகை மற்றும் பணத்தை கத்தி முனையில் கொள்ளையடிக்க முயற்சி செய்துள்ளனர்.

அந்த நேரத்தில் திடீரென அலாரம் அடித்ததால், நிலைகுலைந்த கொள்ளையர்கள், மேலாளர் சேகரை கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இது தொடர்பாக பெசன்ட் நகர் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.