சர்வதேச அழகிப் போட்டியில் ஃபிலிப்பைன்ஸ் ஆசிரியை வெற்றி

0
51

philipainsஜப்பானின் டோக்‍கியோவில் நடைபெற்ற சர்வதேச அழகிப் போட்டியில் ஃபிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த கெல்லி வெர்சோசா பட்டம் வென்றுள்ளார். இப்போட்டியில் 69 நாடுகளை சேர்ந்த அழகிகள் கலந்துகொண்டனர்.

அவர்களுக்‍கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஃபிலிப்பைன்ஸை சேர்ந்த கெல்லி வெர்சோசா சர்வதேச அழகி பட்டம் வென்றுள்ளார். 24 வயதான இவர் மழலையர் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்‍கது. இரண்டாம் இடத்தை ஆஸ்திரேலியாவை சேர்ந்தவரும் மூன்றாம் இடத்தை இந்தோனேசியாவை சேர்ந்தவரும் தட்டிச் சென்றுள்ளனர்.