கொழும்பில் இருந்து மதுரை வரும் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

0
87

sri-lankanவரும் 30 ஆம் தேதி முதல் கொழும்புவில் இருந்து மதுரைக்கு தினசரி விமான சேவையை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.

முன்னதாக கொழும்புவில் இருந்து மதுரைக்கு இயக்கப்பட்ட “மிகின் லங்கா” தனது சேவையை இம்மாத இறுதியுடன் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தது. இதன் காரணமாகவே இந்த புதிய சேவையை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.

இதன்படி, கொழும்பிலிருந்து மதியம் 2.10க்கு புறப்பட்டு மதியம் 3.10க்கு மதுரைக்கு வரும் மேற்படி விமானம், மாலை 4.30 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு மாலை 5.30 மணிக்கு கொழும்பு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.