வெளவால்களுக்காக தீபாவளி பட்டாசை தியாகம் செய்த மக்கள்

0
60

fruit-batதிருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே தோப்புப்பட்டி என்ற கிராமத்தில் உள்ள மக்கள் 27 ஆண்டுகளாக பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர். 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராமத்தில் சுமார் 20,000க்கு மேற்பட்ட வெளவால்கள் உள்ளன.

பட்டாசு சத்தம் கேட்டால் வெளவால்களுக்கு இடையூறு ஏற்படும், அல்லது இந்த இடங்களை விட்டு வெளியேறி விடுமோ, என்ற அச்சத்தில் இந்த கிராமத்தினர் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியை கொண்டாடி வருகின்றனர்.